சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்கு அனுப்பி 12 லட்சம் மோசடி

குமரியில் சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்கு அனுப்பி 12 லட்சம் மோசடி

Update: 2024-07-06 06:20 GMT

மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (29). இவருடைய தங்கை மகாலட்சுமி நர்சிங் முடித்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல  நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.      அப்போது டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவரும் ஸ்டெல்லா பேபி என்பவர் துபாயில் உள்ள  ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை இருப்பதாகவும் ரூ. 12 லட்சம் கொடுத்தால் அந்த வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.      இதை நம்பிய மகேஷ் மற்றும் மகாலட்சுமி 3 தவணையாக 12 லட்சம் ரூபாய்  கொடுத்தனர்.  இதை அடுத்து ஸ்டெல்லா பேபி கடந்த 24- 1 - 2004 அன்று சுற்றுலா விசாவில் மகாலட்சுமியை துபாய்க்கு அனுப்பி வைத்தனர்.      இந்த நிலையில்  துபாய் சென்ற மகாலட்சுமிக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. மேலும் விசாக்காலம்  முடித்ததால் அவர் ஊருக்கு திரும்ப வந்தார். தங்கள் ஏமாற்றப்பட்டது உணர்ந்த மகேஷ் மற்றும் மகாலட்சுமி நெல்லை சென்று ஸ்டெல்லா பேபி இடம் பணத்தை திருப்பி கேட்டனர்.       ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து தக்கலை  போலீசில் மகேஷ புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் பண மோசடி செய்த ஸ்டெல்லா  மற்றும் இதற்கு துணையாக இருந்த அவரது கணவர் மதன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News