120 கிலோ கஞ்சா பறிமுதல்: நான்கு பேர் கைது
விருதுநகரில் வாகன சோதனையில் 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நான்கு நபர்களை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 05:36 GMT
கஞ்சா பறிமுதல்
விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவல் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட எல்லை என சத்திர ரெட்டியபட்டி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது அங்கு வந்த கார் ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்த முயற்சித்த போது அந்த நிற்காமல் சென்ற நிலையில் அந்த காரை விரட்டி பிடித்த காவல்துறையினர் அந்த காரை சோதனை செய்ததில் அந்த காரில் 120 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது மேலும் காரில் இருந்த கேரளா மாநிலத்தைச் ரோஷன் (28) சங்கர் ராம் (41) ஆகிய இருவரை கைது செய்தனர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்திலிருந்து விற்பனைக்காக திருவனந்தபுரத்திற்கு கஞ்சாவை காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கடத்தலுக்கு உதவிய மற்றொரு காரில் இவர்களுக்கு முன்பு பயணித்த கேரளாவை சேர்ந்த அஜித் (38) மற்றும் ஸ்ரீகாந்த் (45)ஆகிய இருவரையும் ஊரக காவல் நிலைய போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது செய்தனர். இந்த நான்கு நபர்களையும் ஊரக காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் 120 கிலோ கஞ்சா கடத்திய வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பிடிபட்ட நான்கு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றன இப்படிப்பட்ட 120 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 12 லட்சம் இருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.