கோமுகி அணையில் ரூ.12.40 கோடியில் பராமரிப்பு பணி

கோமுகி அணையில் ரூ.12.40 கோடியில் பராமரிப்பு பணி

Update: 2024-07-15 06:28 GMT

ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய நீர் தேக்கமான கோமுகி அணை, கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. பருவ மழை காலங்களில் மலை பகுதியில் பெய்யும் பெரும்பாலன மழை நீர், கல்படை ஆறு வழியாக அணைக்கு வந்து தேங்குகிறது. அணையின் நீர் மட்டம் 46 அடி ஆகும். பருவ மழை காலங்களில் அணையில் இருந்து ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றும் போது 11 தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடும் நிலையில் 40 ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுகிறது. அணையின் பழைய மற்றும் புதிய பாசன கால்வாய் மூலம் 40க்கும் மேற்பட்ட கிராமங்களின் 10,860 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் நபார்டு வங்கி உதவியுடன் நீர்வளத் துறையின் சார்பில் 12 கோடியே 40 லட்சம் மதிப்பில் கோமுகி அணை யின் 2 ெஷட்டர்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். அதில் அணைக்கு நீர் வரத்து, நீர் வெளியேற்றம், பாசன வாய்க்கால், பாசனத்திற்கு திறக்கப்படும் மதகு உள்ளிட்டவை குறித்து நீர்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின், அணையின் மேற்புறம் உள்ள மலைப்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News