உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 1,27,780 ரூபாய் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 1,27,780 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-03-20 09:02 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேம்பரளி சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரி காளிமுத்து தலைமையில் போலீசார் உதவியுடன் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் வந்த காரை சோதனை செய்த போது ரூபாய் 1,27 780 பணம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அந்த வண்டியில் வந்தவர்களிடம் விசாரித்த போது மதுரை மாவட்டம் , கடச்சனேந்தல் அருகே காதக்கிணறு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பதும் மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேல்முறையீடு அலுவலரிடம் உரிய ஆவணத்தை நேரில் காண்பித்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.