விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.13 லட்சம் காணிக்கையாக செலுத்தப்பட்டது உண்டியல் எண்ணிக்கையில் தெரிவந்தது.

Update: 2024-01-25 02:26 GMT

 விருத்தகிரீஸ்வரர் கோவில் 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன் முன்னிலையில் மொத்தம் 10 உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. கோயில் செயல் அலுவலா் மாலா உடனிருந்தாா். இந்தப் பணியில் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா். இதில் ரொக்கம் ரூபாய் 13, 85, 329, தங்கம் 11 கிராம், வெள்ளி 42 கிராம் இருந்ததாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News