135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை.
மதுரை மேலூரில் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
மதுரை மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மண்டபத்தில் இன்று (ஆக.20) நடைபெற்ற பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முல்லைப் பெரியாறு வைகை அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் வகையில் உள்ளதால் அரசு ஆணை எண் 122 இன் படி பெரியாறு ஒருபோக பாசனப்பகுதிகளுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் பாசன நீர் திறந்து ஜனவரி 15 வரை 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கும் படி தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டிய தமிழக அரசையும் அமைச்சர் மூர்த்தியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.