வங்கியில் செலுத்த கொண்டு சென்ற ரூபாய் 14 லட்சம் பறிமுதல் 

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் வங்கியில் வைப்பீடு செய்தவற்காக கொண்டுசெல்லப்பட்ட 15 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-04 16:19 GMT

வங்கியில் செலுத்த கொண்டு சென்ற ரூபாய் 14 லட்சம் பறிமுதல் 

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியை சேர்ந்தவர் அஜய் காந்த். இவர் இன்று தோவாளை கூட்டுறவு வங்கியில் வைப்பீடு செய்வதற்காக 14 லட்சம் ரூபாய் கொண்டு சென்றார். பின்னர் கூட்டுறவு வங்கியின் வைப்பீடுசெய்ய முடியாத நிலையில் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கிக்கு கொண்டு செல்லும்போது தேர்தல் பறக்கும் படையினர் தோவாளை பகுதியில் வைத்து தணிக்கை செய்தனர்.

அப்போது எவ்வித ஆவணம் இன்றி கையில் இருந்த பையை ஆய்வு செய்தபோது அதில் 14 லட்சம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. ஆவணங்கள் ஏதுமில்லாததால் 14 லட்ச ரூபாயும் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதில் அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் மருத்துவர் சுப்புலட்சுமி, தோவாளை வட்டாட்சியர் மு.கோலப்பன், தோவாளை தனி வட்டாட்சியர் சுப்ரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் சொர்ண பிரதாபன், மண்டல துணை வட்டாட்சியர் கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News