15 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி - பலே குற்றவாளி கைது.
கடையநல்லூரில் கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-02-12 02:17 GMT
மணிசாகுல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 2006ம் ஆண்டு குற்றவாளியான கபீர் என்ற மணிசாகுல் 42 என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதின் பேரில் கடையநல்லூர் மற்றும் தென்காசி காவல் துறையினர் இணைந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.