மொபைல் கடையில் ₹1.50 லட்ச ரூபாய் மொபைல்,₹80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை சிசிடிவி காட்சி !!!

ஆத்தூர் அருகே காந்திபுரம் பகுதியில் செல்போன் கடையில் மர்மநபர்கள் அதிகாலை கடையின் பூட்டை உடைத்து ₹1.50 லட்சம் மதிப்பிலான மொபைல் போன்கள் ₹80 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்த சிசிடிவி கட்சி வெளியாகி வைரல்.

Update: 2024-03-29 10:05 GMT

 சிசிடிவி காட்சி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காந்திபுரம் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக கவியரசன் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார் இந்நிலையில் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்க்கும் போது கடையில் வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட ₹1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் டிராவில் வைத்திருந்த ₹80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து திருடும் காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது இது குறித்து ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News