பட்டுக்கோட்டையில் 150 லிட்டர்  ஊரல் சாராயம் அழிப்பு

பட்டுக்கோட்டையில் 150 லிட்டர்  ஊரல் சாராயம் கண்டுபிடித்து  அழிக்கப்பட்டது.

Update: 2024-06-21 15:24 GMT
நாகராஜன்

தஞ்சை மாவட்டம், மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் முருகதாசன் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு ஆய்வாளர்  ஜெயா தலைமையில் காவலர்கள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம்,  பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி, தம்பிக்கோட்டை மேலக்காடு, தம்பிக்கோட்டை வடகாடு மற்றும் தம்பிக்கோட்டை சின்னாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜெயா தலைமையில்,

தலைமை காவலர் மற்றும் காவலர்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை அதிகாலை அந்த ஆய்வின் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை சின்னத்தங்காடு பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட பொழுது ஐந்து பேரல்களில், 150 லிட்டர் ஊரல் சாராயம், 

அதாவது கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு முந்தைய  படிநிலையில் மூலப் பொருள்கள் கலந்த கலவையான ஊரல் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.   அந்த சாராய உற்பத்தியில் ஈடுபட்ட தம்பிக்கோட்டை சின்னாத்தங்காடு பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் நாகராஜ் ( வயது 78) , கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மற்ற நபர்களை மதுவிலக்கு அமல் பிரிவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோல் பட்டுக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டு வந்த கிராமங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் மற்றும் இந்நாள் சாராயம் காய்ச்சும்  பழக்கம் உள்ள  குற்றவாளிகளையும் தேடிப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.  க

ள்ளக்குறிச்சி சம்பவத்தில் பல உயிர்கள் பலியான நிலையில் பட்டுக்கோட்டை பகுதியில் 150 லிட்டர் கள்ளச் சாராயம் பிடிக்கப்பட்டுள்ளது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News