சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 1,500 அலுவலர்கள்

சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 1,500 அலுவலர்கள் உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-24 05:43 GMT

சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 1,500 அலுவலர்கள் உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.


சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலம், கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள் படி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன்படி வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீசார், அரசு பணியாளர்கள் என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் ஆணையத்தின் பொது பார்வையாளர், வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு இருப்பு அறை திறப்பது முதல் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து பணிகளும் வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பயிற்சி முகாமில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சிவசுப்பிரமணியன் (தேர்தல்), ஜெகநாதன் (பொது), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News