16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்ற இளைஞர் குறித்து சிறுமியின் தாய் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
புகார்;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியினரின் இரண்டாவது மகள் (17) மதுரை தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார் இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி கல்லூரி விடுமுறை என்பதால் தனது வீட்டிற்கு வந்த தங்கி இருந்த சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடியும் கிடைக்கவில்லை இந்நிலையில் ஜக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் - சாந்தி ஆகியோரின் மகன் அஜய்வத்ரன் சிறுமியின் தாய்க்கு போன் செய்து நான் உங்கள் மகளை காதல் செய்து வந்ததால் கடத்தி வந்து விட்டேன் என தெரிவித்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில் என் மகளுக்கு 16 வயது தான் ஆகிறது ஜக்கம்பட்டியைச் சேர்ந்த அஜய் வத்ரன் தனது மகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டான் என் மகள் எங்கே இருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியாமல் வேதனையுடன் இருப்பதாக கண்ணீர் மல்க கூறினார் புகார் அளிக்க வந்தால் மாவட்ட எஸ்.பி யை கூட பார்க்க விடாமல் அடுத்த வாரம் வரச் சொல்வதாக அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்த பெண் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார் முன்னதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த சிறுமியின் தாயார் மயக்கம் அடைந்து கீழ விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அவருக்கு தண்ணீர் குடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்