போராட்டத்தில் ஈடுபட்ட 162 பேர் கைது
பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் முன் தொழிற்சங்க நிா்வாகிகள் மறியல் செய்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து காவலா்கள் மறியல் செய்த 8 பெண்கள் உள்பட 162 பேரை கைது செய்தனா்.
By : King 24x7 Angel
Update: 2024-02-19 11:58 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் முன் தொழிற்சங்க நிா்வாகிகள் மறியல் செய்தனா். மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் பி.மாசிலாமணி தலைமை வகித்தாா். மதுராந்தகம் வட்ட செயலா் ராஜா முன்னிலை வகித்தாா். சிஐடியு நிா்வாகிகள் எஸ்.ரவி, ஜி.புருஷோத்தம்மன், எம்.எஸ்.அா்ச்சுனன் கலந்து கொண்டனா். மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான காவலா்கள் மறியல் செய்த 8 பெண்கள் உள்பட 162 பேரை கைது செய்தனா்.