24 அரசு உதவி பெறும் பள்ளியில் 1677- மாணாக்கர்கள் காலை உணவு திட்டம் !
கரூர் மாவட்டத்தில் 24 அரசு உதவி பெறும் பள்ளியில் 1677- மாணாக்கர்கள் காலை உணவு திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் 24 அரசு உதவி பெறும் பள்ளியில் 1677- மாணாக்கர்கள் பயன் பெறுகிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரி அரசு உதவி பெறும்,புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழக முழுவதும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில், கரூர் வட்டத்தில் 3 பள்ளிகளில் 124 மாணாக்கர்களும், தாந்தோணி வட்டத்தில் ஒரு பள்ளியில் 50 மாணாக்கர்களும், க.பரமத்தியில் 3- பள்ளியில் 176 மாணாக்கர்களும், குளித்தலையில் 4 வட்டத்தில் 269 மாணாக்கர்களும், கிருஷ்ணராயபுரத்தில் 5 வட்டத்தில் 31 மாணாக்கர்களும், கடவூர் வட்டத்தில் நான்கு பள்ளிகளில் 251 மாணக்கர்களும், தோகைமலை வட்டத்தில் நான்கு பள்ளிகளில் 56 மாணவர்கள் என மொத்தம் கரூர் மாவட்டத்தில் 24 பள்ளிகளில் 1677- மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.