17-வது நாளாக பள்ளி செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க  வலியுறுத்தி 17 வது நாளாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;

Update: 2025-02-12 14:42 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கழுவமுள்ளி ஆற்றாங்கரை பகுதியில் ஆதியன் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவின் கீழ் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நீண்ட காலமாக தங்களுக்கு பழங்குடியினர் என (ST )சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கு பல்வேறு மனுக்களை அளித்தும் எந்தவித பலனும் இல்லை என வலியுறுத்தி தங்களது குழந்தைகளை இன்று பதினேழாவது நாளாக பள்ளிக்கு அனுப்பாமல் ஆதியன் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக அரசு மற்ற மாவட்டங்களில் வசிக்கும் தங்கள் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள பழங்குடியினர் சான்றிதழை தங்களுக்கும் உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News