மே.17 இயக்கத்தினர் கைது.
மதுரை வரும் மோடியே வெளியே போ என்ற கோஷத்துடன் மே.17 இயக்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.;
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இன்று (ஏப்.6) காலை மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மதுரை வரும் பிரதமர் மோடியே வெளியே போ என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்பு சாலை மறியல் செய்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் மோடி படத்தை கிழித்தெறிந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.