உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
அரகண்டநல்லூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1.72 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-13 00:42 GMT
பணம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே முகையூரில் தேர்தல் பறக்கும் படை குழுவினர், அதிகாரி ஜெய்சன் தலைமையில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
இதில் காய்கறி வியாபாரியான எல்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் மணி (வயது 33) உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.