மாணவி பாலியல் வன்கொடுமை -சிறுவன் கைது

சேலத்தில் 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2024-01-29 06:26 GMT

சிறுவன் கைது

சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியை திருப்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சிறுமியின் காதலன், திருப்பூருக்கு சென்று காதலியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இருவரும் நெருக்கமாக ஒன்றாக இருப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை காதலியின் பெற்றோரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

Tags:    

Similar News