170 கிலோ கஞ்சாவுடன் இருவர் அதிரடியாக கைது
மதுரை அருகே காரில் 160 கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில், சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வம் அவர்களின் உத்தரவின் பேரில், நேற்று 14.06.2025ம் தேதி இரவு இளமனூர் அரசு பள்ளி அருகே சிலைமான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைமுருகன் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கிரே கலர் இன்னோவா காரை சோதனை செய்த போது, சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 160 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை கடத்தி வந்த 1) நேசகுமார், 27, த/பெ.அந்தோனி சந்தியாகு, குந்துக்கால், பாம்பன், இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் 2) ஜானிபௌடிக், 28, த/பெ.அந்தோனிசாமி, பெரியவாக, வீரப்பன்சத்திரம், ஈரோடு மாவட்டம் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 160 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலைமான் காலல் நிலையத்தில் மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.