அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன்படி, ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஈரோடு, காளை மாட்டுச் சிலை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரை பிடித்து விசாரித்த தில் அவர்கள் கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்துள்ள செம்மாண்டபாளையத்தை சேர்ந்த லோக நாதன் (35), க.பரமத்தி, இந்திர நகரை சேர்ந்த கலை நிலவன் (22) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த தும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.