+2 முடித்த வேலூர் மாணவர்கள் கவனத்திற்கு...
மாணவர்களுக்கு கல்வியாளர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.;
வேலூர் மாவட்டத்தில், 'கல்லூரி கனவு' என்ற பெயரில் +2 முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? உங்கள் கனவுகளை நனவாக்கும் படிப்புகள் எவை? உயர்கல்விக்கு செல்ல என்னென்ன உதவித்தொகை வாய்ப்புகள் உள்ளன? என்பது குறித்து மாணவர்களுக்கு கல்வியாளர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி வரும் மே 21ஆம் தேதி குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற உள்ளது.