2 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்
ஒட்டன்சத்திரத்தில் 2 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்;
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியம், கீரனூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற புதிய பேருந்துகள் இயக்க துவக்க விழாவில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 2 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து, அதில் பயணம் செய்தார்.