மரக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய 2 பேர் கைது!

பல்லடத்தில் மரக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய 2 பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-26 13:08 GMT

பல்லடத்தில் மரக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய 2 பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.


பல்லடத்தில் மரக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய 2 பேர் கைது! பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை- பருவாய் மெயின் ரோட்டில் மரக்கடை வைத்திருப்போர் செல்வராஜ் வயது (55) பருவாயை சேர்ந்தவர்கள் கருப்பசாமி (44), சதீஷ்(26). இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு பந்தல் போட செல்வராஜிடம் மரச்சாமான்கள் வாங்கியது தொடர்பாக பணம் பாக்கி வைத்தது கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement

இந்த நிலையில் சம்பவத்தன்று மரக்கடையில் செல்வராஜ் இருந்த போது அங்கு வந்த கருப்பசாமி, சதீஷ் வாய்தகராரில் ஈடுபட்டு கருப்புசாமி கத்தியை எடுத்து செல்வராஜ் கழுத்தில் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதுகுறித்து பல்லடம் போலிசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

Similar News