கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல 2 நாட்கள் தடை
கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-05-01 03:05 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை,மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலைகிராமங்களில் உள்ள வனப்பகுதிகளிலும், வருவாய் நிலங்களிலும்,தனியார் தோட்டப்பகுதிகளிலும் 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது,இதனால் பச்சை பசேல் என காட்சியளித்த மலை முகடுகள் தற்போது சாம்பல் மேடுகளாக காட்சியளிக்கிறது, மேலும் இப்பகுதி புகைமண்டலமாக காட்சியளிப்பதுடன் காற்றில் சாம்பல் பறந்து வருகிறது, மேலும் வனப்பகுதி வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் எரிந்து சேதமடைந்துள்ளன,இதனால் மலைக்கிராமங்களுக்கு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இச்சாலையை கடக்கும் மக்கள் பெரும் சிரமத்துடன் கடந்து சென்று வருகின்றனர்,இதனையடுத்து தீயணைப்பு துறையினர், மற்றும் வனத் துறையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், இருப்பினும் தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது, இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல்(மே 1மற்றும் மே 2ஆம் தேதி) நாளை மறுநாள் வரை இரண்டு தினங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் கனரக வாகனங்கள் இந்தப்பகுதியில் செல்ல தடைவிதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர், மேலும் தீயை அணைக்க தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கொண்டு செல்வதால் தற்காலிகமாக தடை விதித்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் சென்று வருவதற்கும் அனுமதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.