2 லட்சம் பக்தர்கள் பழநி பயணம்
ஒட்டன்சத்திரம் வழியாக பாதயாத்திரையில் . 2 லட்சம் பக்தர்கள் பழநிக்கு பயணம் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-24 06:16 GMT
2 லட்சம் பக்தர்கள் பழநி பயணம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாகத்தான் மதுரை, வாடிப்பட்டி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நத்தம், காரைக்குடி, நாமக்கல், திருச்சி, வத்தலக்குண்டு, ராமேஸ்வரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வாடிப்பட்டி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் பழநிக்கு செல்கின்றனர். தைப்பூச திருவிழா நாளை நடைபெற இருப்பதால் நேற்று மட்டும் அதிகாலை முதல் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு சென்றனர்.