நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 2 குற்றவாளிகள் கைது !

Update: 2024-07-18 06:18 GMT

பாலசுப்பிரமணியன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய எல்லையிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி காலை அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.

இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர். சம்பவம் நடத்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனின் நேரடி கண்காணிப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் பாண்டியராஜனின் சகோதரரும் நாதக நிர்வாகியாக செயல்பட்டு வந்தவருமான பாலசுப்ரமணியன், மகாலிங்கத்திடம் பிரச்சனை செய்து வந்துள்ளார்.

Tags:    

Similar News