திருப்பூர் மாநகரில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் 2 பேர் கைது!

திருப்பூர் மாநகரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வட மாநில வாலிபர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-10 07:56 GMT

கைது செய்யப்பட்ட மனோரஞ்சன் நஹாக், துலாமணி மாலிக் 

திருப்பூர் மாநகரில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரம் மதுவிலக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையிலான போலீசார் பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 2 வட மாநில வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில்  ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் நஹாக் ( 27 ) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துலாமணி மாலிக்  (34) என்பது தெரிய வந்தது (34). இருவரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர்களிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

Tags:    

Similar News