2. 50 லட்சம் பறவைகள் முகாம் - புது சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி

2. 50 லட்சம் பறவைகள் முகாம் - புது சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி

Update: 2024-02-13 10:24 GMT

ஓதியூர் ஏரி

செங்கல்பட்டு மாவட்டம் ஓதியூர் ஏரியில், ஒரே சமயத்தில் 2. 50 லட்சம் பறவைகள் முகாமிட்டுள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன. இதையடுத்து, இப்பகுதி பறவைகள் சரணாலயமாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மே மாதம் வரை வலசை பறவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் வலசை பறவைகள் முகாமிடுகின்றன. இது குறித்த விபரங்களை ஆவணப்படுத்துவதற்காக, வனத்துறையும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் கணக்கெடுப்பு நடத்துகின்றன. இந்த வகையில், சென்னையில், பள்ளிக்கரணை, கேளம்பாக்கம் அடுத்த முட்டுக்காடு கழிமுகம், கழிவேலி ஆகிய இடங்களில் தன்னார்வலர்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இதில், கிழக்கு கடற்கரை சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில், ஓதியூர் ஏரி அமைந்துள்ளது. பழவேற்காடு, பள்ளிக்கரணை, முட்டுக்காடு கழிமுகம் போன்று உவர்நீர் வந்து செல்லும் வகையில், இந்த ஏரி அமைந்துள்ளது. நீர்நிலை பறவைகளும், உவர்நீர் சார்ந்த பறவைகளும் இங்கு போட்டி போட்டு முகாமிட்டுள்ளதை பார்க்க முடிகிறது. பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இங்கு பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளன.
Tags:    

Similar News