நிலக்கோட்டையில் இரு வாகனம் திருடிய 2 பேர் கைது
நிலக்கோட்டையில் இரு வாகனம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-02 08:19 GMT
கோப்பு படம்
நிலக்கோட்டையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்து மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா(23), திண்டுக்கல் முத்தழகுப்பட்டி பகுதியை சேர்ந்த கிஷோர் வேளாங்கண்ணி(23) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.