மெகா சைஸ் பேக்குளை பயன்படுத்தி ஆடு திருடிய 2 பேர் கைது
Update: 2023-11-28 07:22 GMT
கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சியில் உள்ள அபிநவம் பகுதியில், இரண்டு வாலிபர்கள் டூவீலரில் வந்து ஆடு திருடியதை பார்த்த பொதுமக்கள், இருவரையும் விரட்டி பிடித்து ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் மணிகண்டன் (20) வலசையூர் ஸ்பின்னிங் மில் பகுதியைச் சேர்ந்த தயாநிதி மகன் ஹரிஷ் என்கின்ற கரீம் அலாத்திஸ் (23) என்பது தெரியவந்தது. இருவரும் கல்யாணகிரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்ய பயன்படுத்தும் மெகா சைஸ் பேக்குகளை பயன்படுத்தி அதன் மூலம் ஆடுகளை திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.