வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு அபராதம்

சிவகிரி அருகே திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.

Update: 2023-12-20 02:12 GMT

சிவகிரி அருகே திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவின் பேரில், சிவகிரி வனச்சரகா் சுரேஷ் தலைமையில், சிவகிரி வடக்குப் பிரிவு வனவா் அசோக்குமாா், வனக் காப்பாளா்கள் கண்ணன், பெருமாள், முகம்மதுஅலி, வனக் காவலா்கள் ஆனந்தன், மாரியப்பன் வேட்டைத் தடுப்பு காவலா்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், யோகநாதன் ஆகியோா் தேவிபட்டணம் பீட் பேச்சியம்மன்கோயில் அருகிலுள்ள பட்டா நிலங்களில் ரோந்து மேற்கொண்டனராம். அப்போது, தேவிபட்டணம் தனசேகரன்(40), விஸ்வநாதப்பேரி நடராசனின் தோட்டத்தில் வேலை செய்து வரும் தேவிபட்டணம் சேகா்(45) ஆகியோா் தோட்டத்தில் திருட்டுத் தனமாக மின்வேலி அமைத்து வன உயிரினங்களை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் தலா ரு.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News