திருட்டு வழக்கில் இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன திருட்டு வழக்கில் இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க செயின் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.

Update: 2024-02-22 06:11 GMT

 திருட்டு வழக்கில் இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தகாலன்விளை நடுத்தெருவை சேர்ந்த மரியமாணிக்கம் மனைவி அவுரேலியா மேரி (77) என்பவர் கடந்த 03.02.2024 அன்று பொத்தகாலன்விளை பகுதியில் நடந்து வரும் பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மேற்படி அவுரேலியா மேரி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவுரேலியா மேரி 03.02.2024 அன்று அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தங்க நகையை மீட்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  உத்தரவிட்டார். அதன் பேரில் சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர்  திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் செயின் பறிப்பு சம்பவத்தில் குரும்பூர் அம்மன்புரம் அக்ரகார தெருவை சேர்ந்த ராஜகுமார் மகன் சரவணன் (34) மற்றும் அவருடம் 17 வயதுடைய இளஞ்சிறார் ஒருவருவரும் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.  மேலும் இவர்கள் இருவரும் கடந்த 02.02.2024 அன்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தான்குளம் சாலையில் உள்ள மாதாவனம் என்ற இடத்தில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி செய்ததும், இதனையடுத்து நாசரேத் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடமிருந்து ரூ.1,80,000 மதிப்புள்ள 36.600 கிராம் தங்க சங்கிலியையும் நாசரேத் இரயில் நிலையத்தில் திருடப்பட்ட ரூ.40,000 மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் ரூ.4,50,000 மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். சரவணனை கைது செய்தும், 17 வயது இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்துள்ளனர். இவ்வழக்கில் 2பேரை கைது செய்து திருடப்பட்ட நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தட்டார்மடம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
Tags:    

Similar News