மின் இணைப்புக்காக 2 ஆண்டுகளாக காத்திருப்பு
பாபநாசம் வட்டங்களில் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து 2 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்த லின்போது, ஆட்சிக்கு வந்தால் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப் படும் என திமுக அறிவித்தது. இதன்படி, ஆட்சிப் பொறுப் பேற்றவுடன் 2022-ம் ஆண்டில் முதல் கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கும், 2-ம் கட்டமாக 50,00 விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில், பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட கூனஞ்சேரி, பட்டவர்த்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், இலவச மின் இணைப்புக்காக பதிவு செய்த விவசாயிகளுக்கு, மின் மோட்டார், மோட்டார் அறை உள்ளிட்ட கட்டமைப்புகளை நிறை வேற்றி தயார்நிலையில் இருந்தனர். மின் வாரியம் சார்பிலும் மின்கம் பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகளும் பொருத்தப்பட்டன.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகியும் விவசாயி களுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கூனஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி நடராஜன் கூறி யது: இலவச மின் இணைப்புக்கு யொட்டி 2022, ஜன.25-ம் தேதி இலவச மின் இணைப்புக்கான 2007-ல் பதிவு செய்தேன். அதன் பிறகு, தமிழக அரசின் அறிவிப்பை . ஆணை கிடைத்தது. இதையடுத்து, மின் வாரிய அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி ரு.2 லட்சம் கடன் வாங்கி, மின் மோட்டார், மின் மோட்டார் அறை உட்பட அனைத்து கட்டமைப்புகளையும் . முடித்தேன்.மின் வாரியம் சார்பிலும் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டாலும் இதுவரை மின் இணைப்பு மட்டும் வழங்கப்படவில்லை. நிலங்களைதரிசாக விடக்கூடாது என்பதற்காக உளுந்து, எள் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறோம். இதற்கு, வாடகைக்கு டீசல் இன்ஜின் அமர்த்தி நீர்ப் பாய்ச்சி வருவதால், செலவு அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகளின் நல னைக் கருத்தில் கொண்டு, இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக இலவச மின் இணைப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலுயுறுத்தி உள்ளனர் மேலும் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்த திட்டமாகும் எனவே தேர்தலை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி உடனடியாக இலவச மின் இணைப்புகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.