20 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை என முறையீடு
20 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை என முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 360 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. பணி ஒய்வு பெறும் 11 பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடையம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல், நாகல்நகர் பகுதியை சேர்ந்த நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சுப்பிரமணி வயது 80 அவர் அளித்த மனுவில் கூறியதாவது மாற்றுத்திறனாளி என்பதால் மற்றவர்களை போல் வேலைக்கு சென்று குடும்பம் நடத்த முடியவில்லை. எனவே எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆவின் அல்லது பெட்டிக்கடை வைத்துத்தரக்கோரி கடந்த 2005-ம் ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மனு கொடுத்து வருகிறேன். 20 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.