20 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை,ரூ.25 ஆயிரம் அபராதம்

Update: 2024-12-27 15:45 GMT
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த செல்லமந்தாடியை சேர்ந்த சிவனாண்டி(29) என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள், சிவனாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News