திண்டுக்கல் மாவட்டத்தில் 20 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு

முருக பவனத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில் 20 டன் குட்கா பொருட்கள் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

Update: 2024-02-22 05:12 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் 20 டன் குட்கா பறிமுதல் முருக பவனம் குப்பை கிடங்கில் வைத்து அளித்தனர். குட்கா பொருட்களை அளிக்க முடிவு செய்து புதன்கிழமை முருக பவனத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில் 20 டன் குட்கா பொருட்கள் எந்திரம் மூலம் அளிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். குட்கா புகையிலை விற்பது கடத்தி வருவது குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் தொடர்ந்து விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News