அத்துமீறி கடத்த முயன்ற 2000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாகப்பட்டினத்தில் நடந்த சோதனையில் இன்று அத்துமீறிய கடத்த முயன்ற 2000 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்; நான் கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-07 14:14 GMT

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் நடத்திய போதைப்பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் இன்று தடைசெய்யப்பட்ட போதை புகையிலைப்பொருட்கள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 4 நபரை கைது செய்தும் அவர்களிடமிருந்து 1) Hans, 2)Cool lip, 3)VimalpanMasala, போன்ற சுமார் 2000 கிலோ தடை செய்யப்பட்ட போதை புகையிலைப்பொருட்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 07.02.2024 தனிப்படை காவல்துறையினர் மற்றும் தலைஞாயிறு காவல்நிலைய ஆய்வாளர் .ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் தலைஞாயிறு ஆலங்குடி, பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது நன .L KA 41 D 7392 Tata intra (load vehicle) στ நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட போதை புகையிலைப்பொருட்களை கடத்தியது தெரியவந்தது, மேலும் இந்த கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 1)அகமது தம்பி மரைக்கையர்,(33) த/பெ ரகமத்துல்லா, முத்துப்பேட்டை, 2) முர்த்தி (32) த/பெ நாகப்பா, கர்நாடகா 3) நதீம் அகமது(33) பயாஷ் அகமது, பெங்களூர் 4) கமல் சேக் (36) த/பெ சாகுல் ஹமீது, தலைஞாயிறு ஆகிய 4 நபரை கைது செய்து அவர்களிடமிருந்தும் மேலும் தலைஞாயிறு பகுதியில் கமல் சேக்கிற்க்கு சொந்தமான, குடோனில் பறிமுதல் செய்தது என ஆக மொத்தம் சுமார் 2000 கிலோ தடை செய்யப்பட்ட போதை पल्लÚ EL ां ा 1) Hans, 2)Cool lip, 3) Vimalpan Masala, Cur கைப்பற்றப்பட்டது.

இவற்றின் மதிப்பு சுமார் ரூபாய் 15 லட்சம்/- ஆகும். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஒரு 4 சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்புடன் செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர் மற்றும் தலைஞாயிறு காவல்நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் வெகுவாக பாராட்டினார்கள். இது போன்ற தடைசெய்யப்பட்ட போதை புகையிலைப்பொருட்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

Tags:    

Similar News