2000 மெட்ரிக் டன் நெல் காஞ்சிபுரம் தனியார் மில்லுக்கு பயணம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல், அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
Update: 2024-03-15 14:09 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு எடமணல், மணிக்கிராமம், எருக்கூர், சித்தர்காடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசின்நெல் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது மேலும் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரிசியாக்குவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்கு நெல்மூடைகளை நுகர்பொருள் வாணிபக் கழகம் அனுப்பி வைத்து வருகிறது . இதன் ஒரு பகுதியாக 2000 டன் நெல் மூட்டைகளை மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் காஞ்சிபுரம் தனியார் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு முன் தினம் வேலூருக்கும் திருப்பூருக்கும் தலா 2ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மூடைகள்அனுப்பி வைக்கப்பட்டது . தொடர்ந்து இந்த மாதம் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பும்பணி நடைபெறும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.