அல்லேரியில் 210 லிட்டர் சாராயம் பறிமுதல்!

அல்லேரி மலைப்பகுதியில் 210 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து மதுவிலக்கு அமலாக பிரிவு போலீசார் நடவடிக்கை.

Update: 2024-03-31 17:45 GMT

சாராயம் பறிமுதல்

வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் அல்லேரி மலைப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அல்லேரியில் உள்ள தார்வளி மலைப்பகுதியில் 210 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் 210 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அணைக்கட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன், நெல்லிமரத்து கொல்லை பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் சலவன்பேட்டை, சங்கரன்பாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் மதுவிற்றதாக சலவன்பேட்டை செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்த பூங்கோதை (வயது 45), சங்கரன்பாளையம் பெரியசாமி தெருவை சேர்ந்த அஞ்சலி (50) ஆகியோர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News