முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழா

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2024-03-06 08:08 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் செயலாளர் இரா.முத்துவேல் தலைமை வகித்தார். இயக்குநர் (கல்வி) இரா.செல்வகுமரன், முதல்வர் எஸ்.பி.விஜய்குமார், துணை முதல்வர் ஆ.ஸ்டெல்லாபேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஷில்லாங் நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் மற்றும் உயிரி அறிவியல் துறைகளின் புலமுதன்மையரும், பல்கலைக்கழக மானியக்குழுவின் சிறப்பு உதவித்திட்ட துறையின் முன்னாள் தலைவரும், தேசிய அறிவியல் கல்விக்குழு உறுப்பினருமான ஆர்.சர்மா பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர் “கிராமப்புற மாணவர்கள் இவ்வளவு பேர் பட்டம் பெறுவது மகிழ்ச்சிக்கக்கூடிய ஒன்று. ஒவ்வொரு மாணவரும் கல்வி கற்பதன் நோக்கம் பட்டம் பெறுவது மட்டுமே என்று எண்ணக்கூடாது. நல்ல மனிதத்தன்மை பெறுவது ஒன்றே சிறந்த கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு உதாரணம் அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமன் .

வருங்காலத்தில் கல்வி என்பது தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருக்கும் எனவே, மாணவ, மாணவிகள் தொழில்நுட்பத்தை அதிகமாக கற்று தங்களை முன்னேற்றிக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். இவ்விழாவில் பெரியார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த இளநிலை மாணவ, மாணவிகள் 3 பேருக்கும், தன்னாட்சியில் கல்லூரி அளவில் முதலிடம் பிடித்த முதுநிலை மாணவ,மாணவிகள் 12 பேருக்கும் என மொத்தம் 15-தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக அளவில் 14 இளநிலை மாணவர்களும், தன்னாட்சியில் கல்லூரி அளவில் 24 முதுநிலை மாணவ, மாணவிகளும் என மொத்தம் 38-பேர் தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தங்க பதக்கம் மற்றும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்களுடன் சேர்த்து, 1060 இளநிலை மாணவ, மாணவியர், 240 முதுநிலை மாணவ, மாணவியர் என மொத்தம் 1300 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், கல்லூரி முதல்வர் வாசித்த உறுதிமொழியை வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனர். விழாவில் கல்லூரித் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.கௌரிசங்கர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News