அரசு வேலை வாங்கித் தருவதாக 22 லட்சம் மோசடி!

மூன்று நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.

Update: 2024-06-01 07:51 GMT

கைது 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் என்பவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கருவூரை சேர்ந்த சாய் ஸ்ரீ அவரது கணவர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி ஆகியோர் நாகராஜ் குறித்து விசாரித்து அவரது மகன் வேலையில்லாமல் இருப்பதை அறிந்து அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.மேலும் அரசு வேலையில் சேர்வதற்கு அதிகாரிகளிடம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.இதனை நம்பிய நாகராஜ் அவர்களிடம் 1,60,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தியதால் சந்தேகம் அடைந்தவர் பணத்தை திருப்பி தர கேட்டபோது தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து நாகராஜ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கபட்டது.  மோசடி செய்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சாய் ஸ்ரீ,அவரது கணவர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவை மாவட்டத்தில் மேலும் 9 நபர்களிடம் மோசடி செய்ததும் மொத்தம் 22,55,000 ரூபாய் ஏமாற்றியது தெரியவந்தது.பிற மாவட்டங்களிலும் பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து மூவரையும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுபோன்ற அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினால் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.
Tags:    

Similar News