மலையகோயில் மஞ்சுவிரட்டில் 22 பேர் படுகாயம்
திருமயம் அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலையகோயிலில் நடந்த மஞ்சு விரட்டில் 22 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
Update: 2024-01-28 04:29 GMT
மஞ்சு விரட்டு
திருமயம் அருகே மலைய கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது .ஆன்லைனில் பதிவு செய்த 850 காளைகள் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களின் மாடுபிடி வீரர்களை டாக்டர்கள் பரிசோதித்து களத்திற்கு அனுப்பினர். கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் போட்டி காலை 9:30 மணிக்கு தொடங்கியது. ஆர்டிஓ முருகேசன் மஞ்சுவிரட்டு உறுதி மொழியை படிக்க மாடுபிடி வீரர்கள் அதை ஏற்றனர். களத்தில் 850 காளைகள் விடப்பட்டன. அவற்றை இளைஞர்கள் வாடியில் விரட்டி பிடித்து தங்கள் வீரத்தை காட்டினார். அப்போது காளைகள் முட்டியும், இடித்து தள்ளியதிலும் திருமயம் அருண்குமார் வயது 35, கீழகுறிச்சி அடைக்கலம் வயது 23 உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர். நச்சாந்துபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கூடுத கலெக்டர் அபரத் ரசூல், டிஆர்ஓ செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகிமான் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.