230 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

நாகர்கோவில் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 230 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

Update: 2024-02-11 06:05 GMT
பறிமுதல் செய்த கெட்டுப்போன மீன்கள்
குமரி மாவட்டம் நாகர்கோவில்  மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.        அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள்  கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை ஆய்வு செய்தனர்.  அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.  தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.
Tags:    

Similar News