ரூ.23.24 லட்சம் நிதி உதவி வழங்கல்

வழங்கல்

Update: 2025-01-03 04:03 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கூவாடு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன் மகன் சின்னதுரை,31; சென்னையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சின்னதுரை உயிரிழந்தார். உயிரிழந்த சின்னதுரைக்கு 2 வயதில் சவிதா என்ற மகள் உள்ளார். இதனால் மிகுந்த சிரமத்தில் இருந்த அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில், சின்னதுரையுடன் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து காக்கும் உறவுகள் குழு மூலம் நிதி உதவி திரட்டினர்.அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு பணியில் சேர்ந்து, 38 மாவட்டங்களிலும் பணிபுரியும் 6,837 காவலர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் ரூ.23 லட்சத்து 24 ஆயிரத்து 950 நிதி உதவி தொகை பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி நிதி உதவியை இறந்த சின்னதுரையின் தந்தை அர்ஜூனிடம் வழங்கி ஆறுதல் கூறினார். நிதி உதவியாக பெறப்பட்ட பணம் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரது அஞ்சல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டது. அப்போது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.

Similar News