மகளிர் கல்லுாரியில் 23 வது ஆண்டு விழா !
சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லூரியில் 23 வது ஆண்டு கல்லுாரி தின விழா கொண்டாடப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-17 05:48 GMT
ஆண்டு விழா
சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லூரியில் 23 வது ஆண்டு கல்லுாரி தின விழா கொண்டாடப்பட்டது. சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரியின் செயலாளர் அன்னை ஜான் பிரிட்டோ மேரி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அருட்சகோதரி ஜெனிட்டா முன்னிலை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரியின் மின்னணு மற்றும் தொடர்பு துறைத்தலைவர் பூவிழி வரவேற்றார். வி.ஐ.டி., பல்கலைக் கழக இயந்திரவியல் பொறியியல் துறை புல முதல்வர் அருண் டாம்மேத்யூ, விஜய் 'டிவி' புகழ் நகைச்சுவை பேச்சாளர் சிம்பு மதன் மற்றும் பாடகர் கானா சுரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் மாணவிகளின் குழு நடனம், கல்வி, விளையாட்டு போட்ட மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.