24 வருட மருத்துவப் பணி : ஓய்வு பெற்ற மருத்துவருக்கு பொதுமக்கள் பாராட்டு

காங்கேயத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 24 வருடங்கள்  சிறப்பாக பணியாற்றி பணி ஒய்வு பெற்ற  மருத்துவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

Update: 2024-06-04 08:32 GMT

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் கடந்த 2000ஆம் வருடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டவர் மருத்துவர்  முரளி. இவர் காங்கேயத்தில் கடந்த 24 வருடங்களாக காங்கேயம் பகுதி பொதுமக்களின் சிறந்த அக்கறை கொண்டு அனைவருக்கும் சிறந்த மருத்துவம் அளித்தவர்.

மேலும் படிப்படியாக தலைமை அறுவை சிகிச்சை மருத்துவராக பதவி உயர்வு பெற்று சிக்கன் குனியா, பன்றிக் காய்ச்சல், டெங்கு மற்றும் கொரோனா போன்ற முக்கிய  காலக்கட்டங்களில் பொதுமக்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர் எனவும், இவரது பணி காலத்தில் காங்கேயம் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது. ஏழைஎளிய மக்கள் மட்டுமின்றி தொழில் அதிபர்கள் வரை இவர் பணியாற்றிய சாவடிபாளையம் மருத்துவமனைக்கு சென்றே சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.  இந்த நிலையில் இவரது பணி காலம் நிறைவடைந்து கடந்த மே மாதம் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News