குமரி முழுவதும் ரவுடிகள் வேட்டை தொடக்கம் ஒரே நாளில் 25 பேர் கைது !

கன்னியாகுமரியில் அதிக குற்ற செயல்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யும் படி நேற்று மாவட்ட முழுவதும் நடந்த அதிரடி சோதனையில் சுமார் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-29 09:37 GMT

கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடத்தும் வகையில் மாவட்ட போலீஸ்  எஸ் பி சுந்தரவதனம்  உத்தரவின் பேரில் ரவுடிகள் வேட்டை தொடங்கியுள்ளது.ஏற்கனவே காவல் நிலையம் வாரியாக ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்ற செயல்களில் ஈடுபட்டு  தலைமறைவாக இருப்பவர்களையும் தேடும் பணி நடந்து வருகிறது.      இந்த நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையம்  வாரியாக ஏ பி சி என மூன்று விதமான பட்டியல் தயாரிக்கப்பட்டு, இதில் அதிக குற்ற செயல்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யும் படி தொடங்கியது. நேற்று மாவட்ட முழுவதும் நடந்த அதிரடி சோதனையில் சுமார் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய நான்கு துணை போலிஸ் சரகங்களிலும் சேர்த்து சுமார் ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் ரவுடிகள் பட்டியல் உள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
Tags:    

Similar News