25,000 மாணவர்களின் முன்னிலையில் காவல் செயலி பதிவிறக்கம்

25,000 மாணவர்களின் முன்னிலையில் காவல் செயலி பதிவிறக்கம்;

Update: 2025-03-15 09:12 GMT
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஆபத்து ஏற்படும் நிமிடத்திலேயே காவல்துறைக்கு தகவல் கொடுக்க உதவும் வகையிலும் பெண்களுடன் எப்பொழுதும் காவல்துறை பாதுகாப்பாகஇருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாகவும் காவல் உதவி என்கிற செயலி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தமிழ்நாடு அரசு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த செயலியை 25,000 மாணவிகள் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்யும் விதமாக திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனவளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமை வகித்தார் கல்வி நிறுவனங்களின் முதன்மை அலுவலர் சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார் ஏடிஎஸ்பி சண்முகம் திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகள்கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒட்டி காவல் உதவி 181என்ற வடிவத்தில் மாணவிகள் அணிவகுத்து நின்று ஒரே நேரத்தில் செல்போனை அசைத்து காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியதாவதுமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு கனக தமிழ்நாடு அரசு காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக காவல் உதவி செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது பெண்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்போதும் அல்லது வேறு எந்த வகையான பிரச்சனைகள் ஏற்படும் போதோ அவசரத்திற்கு இந்த செயலியை பயன்படுத்த முடியும் காவல் உதவி செயலில் 14 வகையான இதர சேவைகளும் உள்ளடங்கி இருக்கிறது அதற்கான விழிப்புணர்வினை இன்று திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு மகளிர் கல்லூரியில் அனைத்து மாணவிகளுக்கும் கற்றுத் தந்து 20 ஆயிரம் மாணவிகள் ஒரே நேரத்தில்செல்போன்களில் காவல் உதவி செயலியை டவுன்லோட் செய்து உள்ளார்கள் இது மட்டுமில்லாமல் இவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்தினால் சான்றிதழ் வழங்கப்படும் அதிகமாக டவுன்லோடு செய்ய ஊக்குவிப்பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்இதனை செய்து தருவதாக மாணவிகள் உறுதி அளித்துள்ளனர்திருச்செங்கோட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பாதி வேலை செய்யவில்லையே என கேட்டபோது சாலை பணிகள் நடந்து வருவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது சாலை பணிகள் முடிந்தவுடன் மீண்டும் முழுமையாக இயங்கும் என கூறினார் இதே போல் சூரியன் பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் குறித்த பிரச்சனை குறித்து கேட்டபோது மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் என கூறினார் இந்த காவல் உதவி செயலி மூலம் குற்ற செயல்களை குறைந்து இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டபோது பெண்கள் தொடர்பான குற்றங்கள் நம்மிடம் பதிவாகிறது எப்பொழுதும் போல் தான் உள்ளது பெண்கள் உரிமைகளை என்ன பாதுகாப்பு அம்சங்கள் என பாதுகாப்பு சட்ட திட்டங்கள் என என்ன என்ன என அறிந்து கொள்ள முன்னர் புகார் செய்யாமல் இருந்தனர் தற்போது புகார் செய்ய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது இதையே நாங்கள் எங்கள் வெற்றியாக பார்க்கிறோம்காவலர்கள் பற்றாக்குறை என்பது குறித்து கேட்டபோதுகாவல்துறை மாவட்டத்தை பொருத்தவரை 1400 காவலர்கள் உள்ளனர் இவர்களுக்கான பணிகள் தற்போது கூடுதலாக உள்ளது என்பதை தவிர வேறு பற்றாக்குறை என்பது எதுவும் இல்லை. மேலும் உட்கோட்ட அலுவலகம் அமைக்க, கூடுதல் இரண்டு காவல் நிலையங்கள் அமைக்க அரசிடம் அனுமதி கோர உள்ளோம். தேவைகளைப் பொறுத்து சில இடங்களில் காவலர்கள் தேவை அதிகமாக இருக்கலாம்.காவல் உதவி செயலி எந்த அளவுக்கு பதிவிறக்கம் ஆகி உள்ளது என கேட்டபோது பல மாவட்டங்களில் இருந்து பல மாநிலங்களில் இருந்து படிப்பவர்கள் இந்த கல்லூரியில் இருப்பதால் அவர்கள் வீட்டு முகவரிதான் அவர்களுடைய செல்போனில் இருக்கும் அதன்படி இந்த மாதம் வரை ஏழாயிரம்பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் வேறு மாவட்டங்களில் படிப்பவர்கள் இந்த கல்லூரியில் இருப்பதால் மாணவிகளின்முகவரியில் பதிவிறக்கம் பதிவாகியுள்ளது எனக் கூறினார்.

Similar News