26 வருடங்களுக்குப் பிறகு விசிக நிர்வாகிகள் விடுதலை
ஒட்டுமொத்த கிராமத்தையே மீட்டெடுத்த வழக்கறிஞருக்கு பாராட்டு;
1999 ஆம் ஆண்டு வயலப்பாடியில் தலித் மக்கள் மீது குன்னம் காவல்துறை தடியடி நடத்தி பொய் வழக்கு போட்டு 120 பேரை கைது செய்தனர் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் பொன்.பால்ராஜ் ஓலைப்பாடிசுருளிராஜன் மற்றும் 16 பேர் 26 வருடத்திற்கு பின்பு 28/ 1 /2025 இன்று குன்னம் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டோம் இவ்வழக்கை சிறப்பாக நடத்திய வழக்கறிஞர் அழகேசன் அவர்களுக்கு எழுச்சி தமிழர் சார்பிலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், இந்த நிகழ்வில் வழக்கறிஞருக்கு உதவியாக இருந்த ஜெயபால் சங்கர் ஆகியோருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.