பறக்கும் படையினர் அதிரடி 26 லட்சம் பறிமுதல்
சங்ககிரியில் உரியஆவணம் இன்றி கொண்டு சென்ற 26 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-04-09 00:58 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், இடங்கணசாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் எடுத்து வந்த ரூ.26.60 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கொங்கணாபுரம் பேரூராட்சி அலுவலக இளநிலை பொறியாளர் அன்பழகன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் சித்தர்கோயிலிருந்து சின்னப்பம்பட்டி செல்லும் வழயில் உள்ள இடங்கணசாலை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி வட்டம், காருவள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னமுத்து மகன் பிரகாஷ் என்பவர் உயரிய ஆவணம் இன்றி, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் இல்லாமல் காரில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப ரொக்கம் ரூ.26 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து உரிய ஆவணம இன்றி கொண்டு ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நாமக்கல் உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய்கோட்டாட்சியருமான ந.லோகநாயகியிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.